search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்ன் சமையல்"

    சோளத்தில் பைப்பர் சத்து மற்றும் மாவு சத்து அதிகம் இருப்பதால் உணவை விரைவில் செரிமானம் அடைய உதவுகின்றது. உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
    தேவையான பொருட்கள்

    வெள்ளை சோளம் - 1 கப்
    இட்லி அரிசி - 1 கப்
    உளுந்து -  அரை கப்
    வெந்தயம் - ஒரு ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை

    சோளம், இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் இவை அனைத்தையும் கலந்து கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும்.

    ஆறு மணி நேரம் ஊறிய பின்னர் மிக்ஸியில் போட்டு இட்லி மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து, 8 மணி நேரம் புளிக்க விடவும்.

    மாவு நன்கு புளித்தவுடன் தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது விட்டு வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சாம்பார் சட்னியுடன் தொட்டுச் சாப்பிட நன்றாக இருக்கும்.

    சூப்பரான சோள தோசை ரெடி.

    Salad, Recipes, Veg Recipes, Healthy Recipes, Corn Recipes, சாலட், கார்ன் சமையல், சைவம், ஆரோக்கிய சமையல்
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    ப்ரோக்கோலி - சிறியது 1
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    கொத்தமல்லி, ப்ரோக்கோலி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். ப்ரோக்கோலி, பேபி கார்னை கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த ப்ரோக்கோலி, பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் ப்ரோக்கோலி சாலட் ரெடி.

    பேபிகார்னில் சாலட், பிரை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று பேபிகார்னை வைத்து சூப்பரான பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபிகார்ன் - 12,
    கடலை மாவு - 1 கப்,
    அரிசிமாவு - 1 டீஸ்பூன்,
    கார்ன்ஃப்ளவர் - 1 டீஸ்பூன்,
    உப்பு - சுவைக்கேற்ப,
    எண்ணெய் - தேவைக்கு,
    ஆப்ப சோடா - சிட்டிகை

    அரைக்க:

    பச்சை மிளகாய் - 3,
    இஞ்சி - 1 துண்டு,
    பூண்டு - 3 பல்.



    செய்முறை:

    பேபிகார்னை சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் 10 நிமிடம் போட்டு வைத்து பின்னர் எடுக்கவும்.

    அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்சியில் போட்டு நைசாக அரைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மாவு, அரைத்த விழுது, உப்பு, தண்ணீர், ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளுங்கள்.

    எண்ணெயைக் காயவைத்து ஒவ்வொரு பேபி கார்னையும் மாவில் நனைத்து எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுங்கள்.

    சுவையான பேபிகார்ன் பஜ்ஜி ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கீன்வா என்பது ஒருவகை வெளிநாட்டு தானியம். நம் நாடு சிறுதானியங்கள் போலவே இதுவும் சிறந்த சத்துணவு. இன்று கீன்வா வெஜிடபிள் சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கீன்வா - அரை கப்
    கேரட் - 1
    சோளம் - சிறிதளவு
    1/2 கப் சிவப்பு குடை மிளகாய்
    பார்ஸ்லே இலை - சிறிதளவு
    வெங்காயத் தாள் - 3
    எலுமிச்சை சாறு - 2 மேசைக்கரண்டி
    மிளகு தூள் - சிறிதளவு
    உப்பு - சிறிதளவு.



    செய்முறை  :


    குக்கரில் கீன்வாவைப் போட்டு 2 கப் தண்ணீர் சேர்த்து, நான்கு விசில் வரும் வரை வேகவிடவும்.

    சோளத்தை வேக வைத்து கொள்ளவும்.

    கேரட், சிவப்பு குடைமிளகாய், பார்ஸ்லே இலை, வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த கீன்வாவை போட்டு அதனுடன் பொடியாக நறுக்கி கேரட், சிவப்பு குடைமிளகாய், பார்ஸ்லே இலை, வெங்காயத்தாள், சோளம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக எலுமிச்சைசாறு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த கீன்வா வெஜிடபிள் சாலட் ரெடி.

    இந்த கீன்வா தென் அமெரிக்காவின் முக்கிய உணவாகும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கோஸ், கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
    தண்ணீர் - தேவைக்கு
    துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
    நறுக்கிய பேபி கார்ன் - 1
    பட்டாணி - சிறிதளவு
    கேரட், மிளகாய் - 1
    உப்பு - தேவைக்கு
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி



    செய்முறை :

    ப.மிளகாய், கேரட்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அகன்ற பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் ஊற்றி துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டு கொதிக்க விடவும்.

    நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொள்ளவும். வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றை கொட்டி வேக வைக்கவும்.

    ஓரளவு வந்ததும் அதனுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்.

    சூப்பரான சத்தான கொத்தமல்லித் தழை சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    எடையைக் குறைக்க நினைப்பவர்கள் மற்றும் பராமரிக்க நினைப்பவர்களுக்கு இந்த சாலட் ஏற்றது. இன்று இந்த சாலட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பேபி கார்ன் - 4,
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 1,
    வெள்ளை மிளகுத் தூள் - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பேபி கார்னை சின்ன சின்ன வட்டமாக வெட்டிக்கொள்ளவும். இதை, கொதிக்கும் தண்ணீரில் ஐந்து நிமிடங்கள் வேகவைக்கவும். ஆவியிலும் வேக வைக்கலாம்.

    வேக வைத்த பேபி கார்னை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து கலக்கவும்.

    அடுத்து மிளகுத் தூள், உப்பு தூவி எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும்.

    கொத்தமல்லித் தழையைத் தூவி, பரிமாறவும்.

    சூப்பரான சத்தான பேபி கார்ன் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சோளத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சோள ரவையை வைத்து சுவையான சத்தான புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சோளக்குருணை - 1 கப்
    அரிசி மாவு - 1/4 கப்
    தேங்காய்த்துருவல் - 3/4 கப்
    பொடித்த வெல்லம் - 3/4 கப்
    நெயில் வறுத்துப் பொடித்த முந்திரி - 3 டேபிள்ஸ்பூன்
    வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
    உப்பு - 1 சிட்டிகை
    ஏலக்காய்தூள் - 1/4 டீஸ்பூன்
    நெய் - சிறிது



    செய்முறை :

    முதலில் வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து கரைத்து வடிகட்டி கெட்டிப்பாகு செய்யவும்.

    அரிசி மாவையும், சோளக்குருணையையும் சூடான கடாயில் லேசாக வறுத்து, உப்பு கரைத்த நீரைச் சிறிது சிறிதாக அதில் சேர்த்து புட்டு மாவு பதத்தில் கலக்கி நன்கு அழுத்தி துணியால் 10 நிமிடம் மூடி வைக்கவும்.

    பின் மாவுகளைக் கட்டியில்லாமல் உதிர்த்துப் பரப்பி ஆவியில் வேகவைக்கவும்.

    கெட்டி வெல்லப்பாகில் தேங்காய்த்துருவல், ஏலக்காய்தூள் சேர்த்து கலந்து, வெந்த மாவில் சிறிது சிறிதாகப் போட்டுக் கலந்து நெய் சேர்த்து பிசறி கட்டியில்லாமல் உதிர்த்து முந்திரி, வேர்க்கடலை, ஏலக்காய்தூள் சேர்த்து கலக்கவும்.

    சுவையான சோள ரவை புட்டு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸில் வைத்துக் கொடுத்தனுப்ப குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய சுவையான சத்தான சாதம் இது. இன்று இந்த சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - ஒரு கப்,
    ஸ்வீட் கார்ன் முத்துகள் - ஒரு கப்,
    மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
    நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவி உதிரியாக வேக வைத்து ஆறவைத்து கொள்ளவும்.

    ஸ்வீட் கார்னை வேக வைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய்விட்டுச் சூடானதும், மிளகுத்தூளைச் சேர்த்து வறுத்துக்கொள்ளவும்.

    இதனுடன் ஆறவைத்த சாதம், ஸ்வீட் கார்ன், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும்.

    சூப்பரான ஸ்வீட் கார்ன் மிளகு சாதம் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதிய உணவிற்கு வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் உருளைக்கிழங்கு, கார்ன் சேர்த்து புலாவ் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    பாசுமதி அரிசி - ஒரு கப்,
    கார்ன் - அரை கப்,
    வெங்காயம் - ஒன்று,
    தக்காளி - 3,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் - 2,
    புதினா, கொத்தமல்லித் தழை - தலா ஒரு கைப்பிடி அளவு,
    மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    தேங்காய்ப் பால் - அரை கப்,
    பட்டை, லவங்கம்,
    ஏலக்காய் - தலா ஒன்று,
    எண்ணெய், நெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    புதினா, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை மிளகாயை கீறிக்கொள்ளவும்.

    அரிசியை நன்றாக கழுவி தேங்காய்ப் பால், ஒன்றேகால் கப் தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்.

    குக்கரில் எண்ணெய், நெய் விட்டு, காய்ந்ததும் பட்டை, ஏலக்காய், லவங்கம் தாளித்த பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

    வெங்காயம் வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    தக்காளி நன்றாக வதங்கியதும் கார்ன், மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

    பிறகு, ஊற வைத்த அரிசி கலவையை ஊற்றவும்.

    இதனுடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்து, குக்கரை மூடவும். நன்கு ஆவி வந்ததும் ‘வெயிட்’ போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து, 10 நிமிடம் கழித்து இறக்கவும்.

    சூப்பரான உருளைக்கிழங்கு - கார்ன் புலாவ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சூப் குடிப்பது மிகவும் நல்லது. இன்று கோஸ், கார்ன் சேர்த்து சத்து நிறைந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோஸ் - 150 கிராம்,
    ஸ்வீட் கார்ன் - 1/4 கப்,
    வெங்காயத்தாள் - 4,
    உப்பு - தேவைக்கு,
    எண்ணெய் - 2 டீஸ்பூன்,
    சிறிய பச்சைமிளகாய் - 1,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    வெங்காயத்தாள், கோஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கோஸ் போட்டு வதக்கவும்.

    நன்கு வதங்கியதும் ஸ்வீட் கார்னை சேர்த்து நன்கு வதக்கி உப்பு, பச்சைமிளகாய், தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

    சிறிது வெந்ததும் கார்ன்ஃப்ளார் மாவை சிறிது தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றவும்.

    2 நிமிடம் கழித்து இறக்கி, வெங்காயத்தாளை தூவி அலங்கரித்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோஸ் ஸ்வீட் கார்ன் சூப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    குழந்தைகள் முதல் பெரியோர் வரை தினமும் ஏதாவது ஒரு சாலட் சாப்பிடுவது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. இன்று ராஜ்மா, ஸ்வீட்கார்ன் சேர்த்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ராஜ்மா - 1 கப்,
    ஸ்வீட்கார்ன் - 1 கப்,
    உப்பு - தேவைக்கு,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்,
    புதினா இலை - சிறிது.



    செய்முறை :

    ராஜ்மாவை முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் வேகவைத்துக் கொள்ளவும்.

    ஸ்வீட்கார்னையும் உதிர்த்து வேகவைத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ராஜ்மா, ஸ்வீட்கார்ன், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு, புதினா கலந்து பரிமாறவும்.

    சூப்பரான சத்தான ராஜ்மா - ஸ்வீட்கார்ன் சாலட் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    மாலையில் பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் கார்ன், பன்னீர் சேர்த்து கபாப் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    சோளம் - 2
    உருளை கிழங்கு - 1 கப்
    பன்னீர் - 1/2 கப்
    நறுக்கிய முட்டைக்கோஸ் - 1/2 கப்
    இஞ்சி - சிறிது
    கொத்தமல்லி - தேவைகேற்ப
    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
    தனியா தூள் - 1/2 ஸ்பூன்
    சீரக தூள் - 1/2 ஸ்பூன்
    சோள மாவு - 2 ஸ்பூன்
    உப்பு, எண்ணெய் - தேவைகேற்ப



    செய்முறை :

    சோளம், உருளைக்கிழங்கை தனித்தனியாக வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    பன்னீரை துருவிக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளை கிழங்கு, துருவிய பன்னீர், சோள மாவு, மசித்த சோளம் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும்.

    இந்தக் கலவையுடன், பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் (தேவைப்பட்டால் கேரட்டையும் துருவி சேர்த்துக்கொள்ளலாம்) பொடியாக நறுக்கிய இஞ்சி, மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீராக தூள், கொத்தமல்லி, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். கலவை கெட்டியாக இருக்க வேண்டும். கபாப் தட்டுவதற்கு ஏற்ற பதத்தில் இல்லையென்றால் மட்டும் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்.

    இந்த கலவையை கபாப்புகளாக தட்டி வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த கபாபை போட்டு பொரித்தெடுக்கவும். தோசைக்கல்லிலும் பொரித்துக் கொள்ளலாம்.

    சூப்பரான கார்ன் - பன்னீர் கபாப் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×